திண்டுக்கல், நவ.6- தமிழ்நாடு என்று பெயர் சூட்ட காரணமானவர்கள் கம்யூனிஸ்ட்டு கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் நகர்க்குழு சார் பாக தமிழ்நாடு உதய தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சியை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசியதாவது: தமிழ்நாடு என்ற பெயர் வரக் காரணமானவர்கள் கம்யூனிஸ்ட்டு கள். இந்த நாளை கம்பீரமாக கொண் டாடுகிறார்கள். நவம்பர் 1 ஆம் தேதி என்பது தமிழ்நாடு உதய தினம் ஆகும். மேலும் இதே நாளில் தான் கன்னியாகுமரி மாவட்டம் கேரளா விலிருந்து தமிழ்நாட்டோடு இணைந்த தினமும் ஆகும். தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். சில கட்சி கள் தலைகீழாக தண்ணீர் குடித்தா லும் ஆட்சிக்கு வரமுடியாது என்கிற நிலையில் இதுபோன்ற பிரச்சனை யை கிளப்பிக் கொண்டேயிருக்கி றார்கள். பழைய மன்னர் ஆட்சிக் காலம் போல தமிழ்நாட்டை பிரித்தால் ஒரு ஆயிரம் நாடுகளாக பிரிக்க முடி யும். மேடைக்கலைவானர் நன் மாறன் தான் மிக நகைச்சுவையாக சொல்லுவார்.
ஒரு வாடகைச் சைக் கிளை எடுத்துக்கொண்டு காலை யில் புறப்பட்டு சுற்றி வந்தால் பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு என்று ஒரு 50 நாட்டை பார்த்து விட்டு வந்துவிட முடியும் என்பார். பழைய கனவுகளிலேயே சிலர் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றதையே இவர்கள் மறந்து விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, நகரச்செயலாளர் அரபுமுகமது, ஒன்றியச்செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ஆசாத், தா.அஜாய்கோஷ், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.என். ஜோதிபாசு, கே.எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். எம்.எல்.கேசவன் நன்றி கூறினார். வேடசந்தூர் ஒன்றியம் எரி யோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்பு ரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வ ராஜ் டி.முத்துச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முத்துச் சாமி, கிருஷ்ணமூர்த்தி, குஜிலி யம்பாறை ஒன்றியச்செயலாளர் ராஜரத்தினம், வடமதுரை பேரூ ராட்சி துணைத்தலைவர் மலைச் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். (ந.நி.)