தேனி, மே 4- பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பதைக் கண்டித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் மே 4 அன்று போராட்டத் தில் ஈடுபட்டனர்.தமிழகத்திலும் போராட்டம் நடைபெற்றது. எல்ஐசி ஊழியர் சங்கத்தின் சார்பில் பெரியகுளம் ,உத்தமபாளை யம் கிளைகளில் இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தம் நடை பெற்றது. பெரியகுளம் கிளையில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளை தலைவர் டி.பி.சரவணகுமார் தலைமை வகித்தார். எல்ஐசி ஓய்வூதி யதாரர் சங்கத்தின் துணைத் தலை வர் சி .பிச்சைமணி சிறப்புரையாற்றி னார். எல்ஐசி முகவர் சங்கத்தின் என். முருகேசன் போராட்டத்தை ஆதரித்து பேசினார். பாளையம் கிளை அலுவல கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கே.சீனிவாசன் ஆதரித்து பேசினார்.
மதுரை
மதுரை கோட்டத்தின் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை செல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் மதுரை கோட்ட தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை கோட்ட பொதுச் செய லாளர் என். பி. ரமேஷ்கண்ணன், சிஐ டியு, எல்.ஐ.சி பென்சனர் சங்கம் உள் ளிட்ட தோழமைச்சங்கத்தினர் ஆத ரித்துப் பேசினர்.
சிவகங்கை
சிவகங்கை, காரைக்குடி, தேவ கோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதி களில் எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் ஆர்ப்பாட்டத் திற்கு கிளைத்தலைவர் குணசேக ரன் தலைமை தாங்கினார். செயலா ளர் நாகராஜன், சிஐடியு ஒருங்கி ணைப்பாளர் சிவகுமார், மற்றும் தோழ மைச்சங்கத்தினர் ஆதரித்துப் பேசி னர்.