districts

img

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆய்வக நுட்பணர்கள் போராட்டம்

மதுரை, மார்ச் 27- புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு  மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை களில் அரசு அறிவித்த பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தமிழக அரசின் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் காலியாக உள்ள நிலை- 11 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை மருத்துவ கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் கிளை தலை வர் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.  மருத்துவத்துறை நிர்வாக ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அ. ராமசந்திரன், அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் புற நகர் மாவட்டச் செயலாளர் அ.தமிழ்செல்வி, மாநிலத் தலைவர் மா. செல்வகுமார். சங்க கிளைச் செயலாளர் ஆ. பரமசிவன் கோரிக் கைகளை தமிழக அரசும் மருத்துவத்துறை நிர்வாகமும் நிறைவேற்ற வலியுறுத்திப் பேசி னர். நெடுஞ்சாலைத்துறை சாலைப ணியாளர் சங்க மாநிலப் பொருளாளா் இரா. தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளர் க.நீதிராஜா நிறைவுரையாற்றி னார். சு.பாக்யலட்சமி நன்றி கூறினார்.