districts

img

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பழனியில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

பழனி, பிப்.16- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 15வது வார்டு சிபிஎம் வேட்பாளர் கே.கந்தசாமி, 16வது வார்டு திமுக வேட்பாளர் மீனாட்சிதேவி, 17வது வார்டு திமுக வேட்பாளர் டி.செபாஸ்டின் உள்ளிட்டோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னரும் முன்னாள் நகர்மன்ற தலைவரு மான வ.ராஜமாணிக்கம், ராமசாமி, தொப் பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கனகு, மாவட்டக்குழு உறுப்பினர் பகத்சிங் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.