districts

img

சிங்கி இறால் கொழுக்க வைத்தல் இலவச பயிற்சி : பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

தூத்துக்குடி, ஜூலை 1 தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘சிங்கி இறால் கொழுக்க வைத்தல்” குறித்த ஒரு நாள் நேரடி இலவச பயிற்சி நடைபெற்றது தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன் வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் பிரதான் மந்திரி மத்திய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ் ‘சிங்கி இறால் கொழுக்க வைத்தல்” பற்றிய ஒரு நாள் நேரடி பயிற்சி வழங்க பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 46 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இப்பயிற்சியில், வளர்ப்பிற்கேற்ற சிங்கி இறால் வகைகள், சிங்கி இறால்களில் ஆண் பெண் அடையாளம் கண்டறிதல், சிங்கி இறாலின் இனவிருத்தி, சிங்கி இறாலின் வளர்ச்சி, கொழுக்க வைக்க சிங்கி இறால் தேர்வு செய்யும் முறை, கிடைக்கும் காலங்கள், இடங்கள், சிங்கி இறால் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள், சிங்கி இறால்களை ஏற்றுமதிக்கு உயிருடன் பேக்கிங் செய்யும் முறைகள். சிங்கி இறால் வளர்ப்பு செலவின வருமான கணக்கீடு குறித்த தொழில் நுட்ப வகுப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. சிங்கி இறால் உறுப்பெருக்குதல் பற்றிய படக்காட்சி காண்பித்து விளக்கப்பட்டது. தருவைகுள கிராம முன்னோடி மீனவர் எம். பிரான்சிஸ் சிங்கி இறால் கொழுப்பேற்றுதலின் அனுபவங்களை பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) இரா. சாந்தகுமார் பயிற்சியில கலந்து கொண்ட பயனாளிக்கு சான்றிதழ் வழங்கி பொருளாதாரத்தில் நலிந்த கடலோர மீனவ சமுதாயத்திற்கு இது போன்ற மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று எடுத்துரைத்தார். மேலும், இப்பயிற்சியின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கான வழி வகைகள் குறித்து துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான சா.ஆதித்தன் விரிவாக எடுத்துக் கூறினார்.

;