வீரவநல்லூர் 2வது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதாவை ஆதரித்து சிபிஎம் தோழர்கள் தீவிர பிரச்சாரம்.
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சி 12 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலா, மன்னாரங்கோடு பகுதியில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷா பாசி, வட்டார குழு உறுப்பினர் சந்திரன், கட்சி உறுப்பினர்கள் அனில் குமார், ராமச்சந்திரன், சசிகுமார், சுரேஷ் குமார், பிரதீஷ், ஸ்டூபர்ட் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
கடையல் பேருராட்சி 4 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வி.ரெகு, கோதையார் மார்க்கெட் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
குழித்துறை நகராட்சி 20 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சர்தார் ஷா மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.