ஈரோடு, மார்ச் 2- ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் புதனன்று பதவி யேற்று கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளர்களாக போட்டியிட்ட ஆப் பக்கூடல் பேரூராட்சி 14 ஆவது வார்டில் கி.விஜயலட்சுமி, நசியனூர் பேரூராட்சி 14 ஆவது வார்டில் சி.பி.தங்கவேல், அந்தியூர் பேரூராட்சி 3 ஆவது வார்டில் கீதாசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் புதனன்று மன்ற உறுப்பினர்களாக பதவி யேற்று கொண்டார். இந்நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.