districts

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் பழங்குடியினரின் உரிமை பறிப்பு

மதுரை, ஜன.25- நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தல் தேதி விரைவில் அறிவிக்கப் பட உள்ளது. இதற்கிடையில் பட் டியல் பழங்குடியின மக்களுக் காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பரவை பேரூராட்சித் தலைவர் பதவி பறி போனது. இதற்கிடை யில் பட்டியலின பழங்குடி மக்க ளுக்கான உரிமையை நிலை நாட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று கோரிக்கை மனு அளித்த னர். மேலும் பட்டியல் பழங்குடி யினர் திங்களன்று ஆட்சியர் அலு வலகம் முன்பு கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் வார்டு எண் 15. 2016-ஆம் ஆண்டு வார்டு மறு சுழற்சி அடிப்படை யில் எஸ்.டி-க்கு ஒதுக்கீடு செய் யப்பட்டது. (பட்டியல் பழங்குடி யினர்) தலைவர்  பொறுப்பும் பட்டி யல் பழங்குடியினருக்கே ஒதுக் கீடு செய்யப்பட்டது, அதற்குப் பிறகு தேர்தல் நடைபெறவில்லை. 2019-ஆம் ஆண்டு வெளியிடப பட்ட வார்டு வரையறையில் பட்டி யல் பழங்குடியினருக்கே ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒன்பது பேரூராட்சிகள் உள்ளன.

இதில் பரவை பேரூராட்சியில் மட்டும் தான் காட்டுநாயக்கர் சமூக மக் கள் அதிகளவில் வசிக்கின்றனர்.  எனவே பரவை பேரூராட்சித் தலைவர் பதவி எஸ்.டி. பெண் ணுக்காக ஒதுக்கப்பட்டு அறி விப்பு வெளியானது. இந்த  நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட உள்ள நிலையில் வெளியான வார்டுகள் மறுவரையறை பட்டி யலில் பழைய 15-ஆ வது வார்டு 4- ஆவது வார்டாக மாற்றப்பட்ட தோடு பொதுப்பிரிவினர் வார்டா கவும் மாற்றப்பட்டுவிட்டது. இத னால் பட்டியல் பழங்குடியினருக் கான உரிமை பறிக்கப்பட்டது  மட்டுமல்ல. அவர்களுக்கான பேரூராட்சித் தலைவர் பதவி யையும் பறித்துவிட்டனர். இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், ஒன்றியச் செய லாளர் ஜீவானந்தம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, பால கிருஷ்ணன், மலர்விழி, பாண்டி, முருகேசன், நாகராஜன், தண்ணீர் முருகன், லெட்சுமணன், குமார், விஜயன், ஆறுமுகம்,  அம்சு ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், பட்டி யல் பழங்குடியினரின் உரிமை பறிக்கப்பட்டது குறித்து விசா ரணை நடத்தி அவர்கள் தேர்தல் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் சத்தியமூர்த்தி நகர் மக்கள் இதே கோரிக்கையை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டமும்  நடத்தி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் கூறுகையில், பழங்குடியின மக்களுக்கு பரவை பேரூராட்சி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது என இரண்டு முறை  அரசாணை மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது. தேர்தல் நடை பெறாத நிலையில், பட்டியல் பழங்குடியினருக்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்ச னையில் உரிய தலையீடு செய்ய வேண்டுமென்றார். நமது செய்தியாளரிடம் பேசிய பழங்குடியின மக்கள்,  ‘ஒரு முறை கூட பழங்குடியின மக் கள் தலைவர் பொறுப்புக்கே வராத நிலையில் இடத்தை மட்டும் ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டுவிட்டு. இப்போது உரி மையைப் பறித்துவிட்டனர்’ என்ற னர்.

;