districts

மதுரை முக்கிய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.21 சதவீதம்  மாணவ-மாணவிகள் தேர்ச்சி

திருநெல்வேலி, ஜுன் 27- தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை காலை வெளியானது. நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 818 பேர் எழுதினர். இதில் 19 ஆயிரத்து 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.21 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 9 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுதியதில் 8 ஆயிரத்து 564 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.62 சதவீதம் ஆகும். மாணவிகள் 11 ஆயிரத்து 44 பேர் தேர்வு  எழுதியதில் 10 ஆயிரத்து 633 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.28 சதவீதம் ஆகும். இதற்கிடையே மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ்1 வகுப்புகள் இன்று தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். முதல் 2 நாட்கள் நல்லொழுக்க பயிற்சிகள் மட்டுமே நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 94.04 சதவீதம் தேர்ச்சி

தூத்துக்குடி, ஜூன் 27 தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 94.04 சதவிகித மாணவ, மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 9201 மாணவர்கள், 10,739 மாணவிகள் என மொத்தம் 19,940 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில், 8,247 மாணவர்கள், 10,504 மாணவிகள் என மொத்தம் 18,751 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.04 சதவிகித தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 89.63 சதவிகிதமும், மாணவிகள் 97.81 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12ஆம் வகுப்புக்கு சேர்க்கப்படுவார்கள் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவர்கள் 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நெல்லை மாநகராட்சி சார்பில் முகக்கவசம் வினியோகம்

திருநெல்வேலி ,ஜூன் 27- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் முகக் கவசம் அணிந்து செல்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அதன்ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வினியோகிக்கும் நிகழ்ச்சியை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, நகர்நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து ரதவீதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தள்ளுவண்டிகடைகளில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி, தொற்று மீண்டும் அதிகரிப்பதால் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முக கவசம் அணிவித்தனர். இதேபோல மாநகர பகுதி முழுவதும் பொது மக்களுக்கு முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாநகராட்சி சார்பில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.50லட்சம் மதிப்புள்ள உரம் திருட்டு 

தூத்துக்குடி, ஜூன் 27 தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள உர மூட்டை கள் திருடுபோனது தொடர்பாக காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் தனியார் ஷிப்பிங் கம்பெனிக்கு சொந்தமான குடோனில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியான உர மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. பின்னர், அந்த உர மூட்டைகள் அங்கிருந்து அரசு குடோன்க ளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உரங்களை அதி காரிகள் ஆய்வு செய்ததில் 162 டன் உரங்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது. மாயமான உரங்களின் மதிப்பு சுமார் ரூ.50லட்சம் ஆகும். இது தொடர்பாக ஷிப்பிங் கம்பெனியின் மேலாளர் அன்பரசு சாமுவேல் துரை (28) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாயமான உர மூட்டைகள் திரவியபுரம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  காவல் துறையினர் உரம் மற்றும் அதனை கடத்தி வர  பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அதனை கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7பவுன் செயின் பறிப்பு: 3 குழந்தைகள் உட்பட 5பேர் காயம்!

தூத்துக்குடி, ஜூன் 27 தூத்துக்குடி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சொரந்தை கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (34). இவரது, மனைவி கிருஷ்ணவேணி (24). இந்த தம்பதியருக்கு அபிலாஷினி (4), அபி வர்த்தினி (3), மற்றும் 6 மாத கைக்குழந்தை முகிலாஷினி என 3 குழந்தை கள் உள்ளனர். ஞாயிறு மாலை கருப்பசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் குளத்தூர் சென்றுவிட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் வேம்பார், சுப்பிரமணியபுரம் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த 2 பேர்  இவர்களது பைக் மீது மோதி கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் கணவன்- மனைவி மற்றும் 3 குழந்தைகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். அப்போது அவ ர்கள் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்தி ருந்த 7 பவுன் செயின்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த தம்பதியர் மற்றும் 3குழந்தைகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகை பறிப்பு சம்பவம் குறித்து புகாரின் பேரில் குளத்தூர் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை பொதுமக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி, ஜூன் 27 ஆத்தூர் பஜாரில் பொதுமக்கள் திடீரென  சாலை மறியலில்  ஈடுபட்டதால் திங்களன்று , திருச்செந்தூர் - தூத்துக் குடி போக்குவரத்து முடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள குமராபண்ணையூர், செல்வன்புதிய னூர்  புதுநகர் செல்லும் பாதை கடந்த 18 வருடங்களாக சீர மைக்கப்படாமல் இருப்பதால் அதை புதுப்பித்து தரக் கோரி யும், ஆத்தூர் - புன்னகாயல் ரோட்டில் டாஸ்மாக் கடையை  இடமாற்றம் செய்யக்கோரியும் ஆத்தூர் மெயின் பஜாரில் பொதுமக்கள் ஒன்று திரண்டு மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே போக்கு வரத்து முடங்கியது. மாற்றுப்பாதையில் பேருந்துகள் ,வாக னங்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் காவல் நிலைய  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாத்திமா நகர் பாலத்தை சீரமைத்திடுக: மாதர் சங்க வட்டார மாநாடு கோரிக்கை

குழித்துறை, ஜுன் 27- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அடைக்காக்குழி வட்டார முதலாவது மாநாடு மாங்குழியில் நடைபெற்றது. கெப்சிமேரி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் லீமாறோஸ், மாவட்டசெயலாளர் ரெகுபதி, மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லாபாய், சாரதாபாய் பத்ம குமாரி, தீபா சஜிலாகிரேஸி  ஆகியோர்  பேசினர். 15 பேர் கொண்ட வட்டாரக்குழு தேர்வு செய்யப்பட்டது. தலை வராக கெப்சிமேரி, செயலாளராக தீபா, பொருளாளராக ரெஞ்சிதம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஏழைகளின் குடும்ப அட்டையில் உள்ள என்பிஎச்எச் முத்திரையை பிஎச்எச் ஆக மாற்றி ரேஷன் பொருள்கள் வழங்க அரசை  கேட்டும், கொல்லங்கோட்டில் மகளிர் காவல் நிலையம் அமைத்திட, 100 நாள் வேலை திட்டத்தில்  வேலை நாட்களை 200 ஆகவும் கூலி ரூ 600 ஆகவும் உயர்த்திட,  பாத்திமாநகர் பாலம் உடைபட்டு 6 மாதமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை உடனடி சரி செய்யக் கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை!

தூத்துக்குடி, ஜூன் 27 கயத்தார் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே தெற்கு செவல்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், “எங்கள் கிராமத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ள நிலையில் மேலும் ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதன் அருகே பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மதுக்கடை யால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே டாஸ்மாக் மதுபான கடையை நகருக்கு வெளியே வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் கலால்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மாணவன் பலி, 7பேர் படுகாயம்!

தூத்துக்குடி, ஜூன் 27 செய்துங்கநல்லூர் அருகே பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆட்டோவில் வந்த 7 குழந்தைகள் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பாளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளி யில் பயிலும் 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு திங்களன்று  காலை ஒரு ஆட்டோ பள்ளிக்கு சென்றது. ஆட்டோவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை வெட்டி யம்பந்தி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் செல்வ நவீன் (5), முத்தாலங்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நவீன்குமார் ( 5), மகள்கள் முகிலா (11), ராகவி (6), பார்வதி நாதன் என்பவரது மகள் குணவதி (4), நல்லத்தம்பி மகன் இசக்கிராஜா( 5), ஆறுமுககுமார் என்பவரது மகள் அபிராமி, மகன் அரிவரதன் ஆகிய 8 பேரும் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோ அனவரதநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 7 மாணவர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான மாணவன் செல்வ நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த உடன் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆட்டோவை வழக்கமாக ஓட்டி வரும் டிரைவருக்கு பதிலாகபுதிதாக ஒருவர் ஆட்டோவை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 100 கடைகளை ஏலம் விட ஆட்சியர் உத்தரவு

நாகர்கோவில், ஜுன் 27 குமரி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சியாக உலகப்புகழ்பெற்ற கன்னியாகுமரி உள்ளது. இங்கு பேரூராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் கன்னியாகுமரி முக்கிய சாலை, பழைய பேருந்து நிலையம் சந்திப்பு, கடற்கரைச் சாலை, விவேகானந்தா பாறை சாலை, ரத வீதி உள்ளிட்ட பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் அனைத்தும் ஏலம் மற்றும் டெண்டர் மூலம் தனியாருக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தற்போது இந்தக் கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு கடையை குத்தகைக்கு எடுத்து இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் வாடகையை நிர்ணயம் செய்வதில் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து கடைகளையும் தற்போதைய வாடகை விகிதத்தில் ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தாட்கோ கடைகளுக்கு செயற்பொறியாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் நிர்ணயம் செய்யும் மாத வாட கைக்கு ஏலம் அல்லது டெண்டர் விடவும் பேரூராட்சிகளின் இதர கடைகள் அனைத்தும் உள்ளூர் வாடகை அளவை ஒப்பீடு செய்து பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பிரிவு வழியாக மறுமதிப்பீடு பெற்று அதன்படியான மாத வாடகை ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகை விடவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வா கத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம் வாயிலாக உத்தர விட்டுள்ளார். புதனன்று (ஜுன் 29) கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடுவது குறித்து முடிவு செய்யப் படுகிறது.

கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.2000 வழங்குக! மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடுகள் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜுன் 27- தமிழக அரசு அறிவித்துள்ள கடும் ஊன முற்றோர், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.2000 தகுதி யுள்ள அனைவருக்கும் கிடைத்திட கன்னியா குமரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு மாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் வட்டார மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ் வரம், இராஜாக்கமங்கலம் வட்டாரங்களில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் மாநாடுகள் நடை பெற்றன. இம்மாநாடுகளில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாவட்டத் தலைவர் எஸ்.சார்லஸ், செயலா ளர் த.மனோகர ஜஸ்டஸ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பேசினர். சுசீந்திரத்தில் சனியன்று (ஜுன் 25) நடந்த அகஸ்தீஸ்வரம் வட்டார முதலாவது மாநாட்டில் எஸ்.எம்.கணபதி தலைமை வகித்தார். வட்டார தலைவராக ஏ.பவானி,  செயலாளராக ஆர்.எஸ்.குமார், பொருளா ளராக டி.மரிய செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலகிருஷ்ணன் புதூர் ஒய்எம்சிஏ சமூதாய கூடத்தில் நடந்த இராஜாக்கமங்கலம் வட்டார முதலாவது மாநாட்டில் தலைவராக டி.ஜாண்சாமுவேல், செயலாளராக டி.தங்ககுமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக கிள்ளியூர் வட்டார மாநாடு வென்சஸ்லாஸ் தலைமையில் தொழிக்கோடு ஆர்டிஎம் சமூக நலக் கூடத்தில்  நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.சார்லஸ், பொருளாளர்  திருப்பணி சுனில்குமார், இணை செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்டோர் பேசினர். தலைவராக மேரி சுசீலா, செயலா ளராக விமல்ராஜ், பொருளாளராக வென்சஸ் லாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதுபோல் குலசேகரத்தில் நடந்த வட்டா ரக்குழு அமைப்பு கூட்டத்தில் ஒருங்கிணைப் பாளராக இன்பராஜ் தேர்வு செய்யப்பட்டார். இதில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்பு ராஜன், திற்பரப்பு பேரூராட்சி துணை தலைவர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், பி.விஸ்வாம்பரன் உள்ளிட்டோர் பேசினர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் தடையற்ற சூழல் உருவாக்க வேண்டும், பொது இடங்க ளில் சிறப்பு கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இம்மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.


 

;