districts

img

மலைவேடன் சமூக மக்களுக்கு இனச்சான்று கோரி திண்டுக்கல் ஆட்சியரிடம் டில்லிபாபு மனு அளிப்பு

இது தொடர்பாக மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாகன் கூறுகையில், மாநில கூர் நோக்குக்குழு மெய்த்தன்மை அறிந்த நபர்களது வாரிசுகளுக்கு சான்றிதழ் உடனடியாக கொடுக்கப்படும். பெற்றோர்களுக்கு சாதிச்சான்றிதழ் பெற்றிருப்பின் அவர்களது பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படும். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மானுடவியல் வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்து முழு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைவேடன் மக்களுக்கு இனச்சான்று பிரச்சனை குறித்து முழு தீர்வு காணப்படும். வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் பெரியூர், கே.சி.பட்டி, பண்ணைக்காடு, பூலத்தூர் பகுதிகளுக்கு வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் நிலப்பட்டா கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

திண்டுக்கல், ஏப்.23- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  மலைவேடன் சமூக மக்களுக்கு பழங்  குடியின சான்று கொடுக்க வேண்டும் என்று அருர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டில்லிபாபு திண்டுக் கல் ஆட்சியர் விசாகனைச் சந்தித்து மனுக் கொடுத்தார்.  இது தொடர்பாக டில்லிபாபு கூறி யதாவது: மலைவேடன் மக்களுக்கு ஆதி வாசி இனச்சான்று கோரி 2021 ஆம் ஆண்டு 1200 பேரை திரட்டி திண் டுக்கல்லில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.     அன்றைய தினமே பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கோட்டாட்சியர் உஷா பழைய வத்தல குண்டு பகுதியில் வசிக்கும் மலை வேடன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த 156 மனுக்களுக்கு 2 மாதத்  தில் சான்றிதழ் கொடுப்பதாக எழுத் துப்பூர்வமாக உறுதியளித்தார். ஒரு வருடமாகியும் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2.7.2021 அன்று  திண்டுக்கல் கோட்டாட்சியரிடம் இனச் சான்று கொடுக்க மறுப்பது தொடர் பாக பேசினேன்.

ஏற்கனவே மலை வேடன் சான்று பெற்றுள்ள மாநில கூர்நோக்கு குழுவில் மெய்த்தன்மை பெற்றவர்களின் ரத்த வழி மற்றும் மரபு சார் உறவினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இனச்சான்று கொடுப்  பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பழைய வத்தலகுண்டு  மக்கள் 12 பேர் மனுக்கொடுத்தனர். ஆனால் கோட்டாட்சியர் உறுதியளித்த தற்கு மாறாக மனுக்கள் மீது விசா ரணை செய்யாமல் கற்பனையான கருத்துக்களை கூறி முன்னுக்குப்பின் முரணாக அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை தமிழ்நாடு அரசின் நெறி முறைகளுக்கு மாறாக அரசாணை களுக்கு முரணாக முன்முடிவோடும், தன்னுடைய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் செயல்பட்டு மலை வேடன் இனச்சான்றிதழ் கோரிய 12 மனுக்களையும் தள்ளுபடி செய் துள்ளார்.

 இது தொடர்பாக மீண்டும் கடந்த 30.12.2021 அன்று ஆட்சியரை நேரில் சந்தித்து, 25 ஆண்டுகளாக இனச்  சான்று கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ள மலைவேடன் மக்களுக்கு இனச்சான்று கோரியபோது மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் குழு வை அமைத்து சான்றிதழ் கொடுப்ப தாக உறுதியளித்தார். ஆனால் இது வரை குழு அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 22.3.2022 அன்று மலைவேடன் சமூகத்தினர் விரைந்து குழு அமைக்க ஆட்சி யரை நேரில் சந்தித்து வலியுறுத்தி னர். பிற மாவட்டங்களில் சாதிச்சான்று இருப்பின் அந்த குழந்தைகளுக்கும், மாநில கூர் நோக்கு குழுவின் சாதிச் சான்று மெய்த்தன்மை பெற்றவர் களின் ரத்த வழி மரபு சார் உற வினர்களுக்கும் குறிப்பாக பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவியர்களுக் கும் முன்னுரிமை அடிப்படையில் இனச்சான்று கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறை திண்டுக்கல் மாவட்டத்தில் பின்பற்றப்படவில்லை என்பதையும் ஆட்சியரிடம் வலி யுறுத்தினோம். ஆட்சியர் உறுதி யளித்ததன் அடிப்படையில் அரசிய லமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, வேலை வாய்ப்பை பெற்றிட கடந்த 25 ஆண்டு களாக இனச்சான்று கோரி போராடி வருகிறோம். ஆட்சியர் நடவடிக்கை எடுத்து இனச்சான்று கொடுக்க முன்வரவேண்டும். இவ்வாறு டில்லிபாபு தெரி வித்தார. இதில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக எம்.செல்லையா, தெய்  வேந்திரன், என்.பெருமாள் (வி.ச), துவரிமான் ஊராட்சி மன்றத்தலைவர் கந்தசாமி, மலைவேடன் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் கௌதம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.