தடுப்பணை பணி பாதிப்பு கடமலைக்குண்டு, ஏப்.12- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்க ளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியா கும் வெள்ளிமலை வனப்பகுதி யில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. இந்நிலையில் திங்கள் கிழமை இரவு வெள்ளிமலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை மூலவைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. வெள்ளப்பெருக்கு கார ணமாக கடமலைக்குண்டுவில் மூலவைகை ஆற்றின் குறுக்கே சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த தடுப்பணை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆற்றில் அமைக் கப்பட்டுள்ள உறை கிணற்றுக் குள் வெள்ளநீர் புகுந்ததால் கட மலைக்குண்டு உள்ளிட்ட சில கிராமங்களில் மின் மோட்டார்கள் பழுதாகி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணிகளில் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.