சிவகங்கை.பிப்.3- சிவகங்கை நகராட்சியில் பணியாற்றி வரக்கூடிய துப்புரவு தொழிலாளர்களிட மிருந்து பிடித்தம் செய்த சொசைட்டி பணம் எல்ஐசி பணம் ஆகியவற்றை உரிய அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. மேலும் அடிப்படை பணிகளை தனியார் யமாக்கும் தமிழக அரசின் உத்தரவு அரசாணை 152 கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் வேங்கையா ஆகியோர் பேசினர்.