districts

மதுரை முக்கிய செய்திகள்

விபத்தில் கணவன், மனைவி பலி

சின்னாளப்பட்டி, ஜன.28- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புறவழி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த னர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்ன வனூர் பகுதியை சேர்ந்தவர் மீனாச்சாமி (50).இவரது மனைவி ஜெயக்கொடி (48). இவர்கள் வெள்ளியன்று சித்தரேவு பகுதியில் உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு தங்களது இரு சக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது வத்தலக்குண்டு புறவழிச் சாலை அருகே லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பட்டி வீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போதையில் தகராறு: மகனை கொன்ற பெற்றோர் கைது 

மதுரை, ஜன.28- மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்று பகுதி யில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கரிமேடு காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர்  சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் சடலமாக கிடந்தது மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவைச் சேர்ந்த முருகே சன் மகன் மணிமாறன் (45) என்பதும், இவர் மனைவி யைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. இவர் அடிக்கடி குடிபோதையில் பெற்றோரிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில் மணிமாறன் வியாழனன்று இரவு குடிபோதையில் தாய் கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த பெற்றோர் கட்டையால் மணிமாறனை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதை யடுத்து அவரின் சடலத்தை மூட்டையாகக் கட்டி மிதிவண்டியில் எடுத்துச்சென்று வைகை ஆற்றுக்குள் வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து முருகேசன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தேனியில்  214 பேருக்கு கொரோனா :  இரண்டு பேர் பலி

தேனி, ஜன.28- தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மருத்துவர், செவிலியர்கள், காவலர்கள் உட்பட 214 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வியாழனன்று 821 பேரு க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 204 பேர், இதர மாவட்டங்களை சேர்ந்த 10 பேர் என 214 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மருத்துவர், அங்கு பணிபுரியும் செவிலி யர் உட்பட 7 பணியாளர்கள், கம்பம் அரசு மருத்துவ மனை செவிலியர், கூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், பிசி பட்டி, உத்தமபாளையம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், பிசி பட்டி அரசு நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என 214 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிந்தலச்சேரியை சேர்ந்த 50 வயது பெண், சுக்குவாடன் பட்டியைச்சேர்ந்த 40 வயது ஆண் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஆண்டிபட்டி அருகே நிலத்தகராறு : 18 பேர் மீது வழக்கு பதிவு 

தேனி, ஜன.28- ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் நிலத்தகராறில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலை யில், காவல்துறையினர் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி, முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி என்பவரின் மகன் பாலசுந்தரராஜ் (49). இவருக்கும் பள்ளபட்டி கிராமத்தை சேர்ந்த வர் பெருமாள்சாமி (62) என்பவருக்கும் நிலப் பிரச்சனை இருந்து வருவதாக தெரிகிறது.  இதனால் வியாழனன்று இவர்கள் இரு பிரி வினருக்கும் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சி யாபுரம் கிராமத்தில் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் கட்டையால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர்  தாக்கி கொண்டனர். இதில், பாலசுந்தர்ராஜன் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.  இதில் இருதரப்பையும் சேர்ந்த  படுகாய மடைந்த பாலசுந்தரராஜ், சௌந்தர்ராஜ், ராஜேஷ் கண்ணன், பெருமாள்சாமி, ஈஸ்வரன், சுப்புலட்சுமி  உள்ளிட்ட 6 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலை யத்தில் பாலசுந்தரராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்சாமி, ஈஸ்வரன், பொன்னுத்தாய், பால் முருகன், இருளம்மாள், பால்ராஜ் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி, ஈஸ்வரன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி, லட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் பெருமாள் சாமி கொடுத்த புகாரின் பேரில் பாலசுந்தரராஜ், செல்வி, அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த செளந்தரராஜ், ராஜேஷ் கண்ணன், ஜெயபிரபு உள்ளிட்ட 5 பேர் மீதும், மேலும் முகவரி தெரியாத 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் 15  குடும்பங்கள்  மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன

தேனி, ஜன.28- தேனி நகராட்சி 32 வது வார்டில் உள்ள ராஜா கலம் பகு தியில் சுமார் 15 குடும்பங்களை சேர்ந்த 32 பேர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டனர். இணைப்பு நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாநிலக் குழு உறுப்பினர் டி.வெங்கடே சன், தாலுகா செயலாளர் இ. தர்மர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன், மாவட் டக் குழு உறுப்பினர் டி.ஜெய பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைப்பு கூட்டத் தில் கிளைச் செயலாளராக சர வணன் தேர்வு செய்யப்பட்டார்.

நீதிமன்றங்களில் நேரடி விசாரணையை தொடங்கிடுக! தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை

மதுரை, ஜன.28-  தமிழகத்தில் நீதிமன்றங்க ளில் நேரடி விசாரணையை தொடங்கக் கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க  மாநிலக் குழு சார்பில் சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதி பதியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங் கத்தின் தலைவர் என்.ஜி.ஆர்.பிரசாத், செயல் தலைவர் ஏ.கோ தண்டம், மாநில பொதுச்செயலா ளர் என்.முத்து அமுதநாதன் ஆகி யோர் வெள்ளியன்று அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:  கொரோனா தொற்றின் காரணமாக நீதிமன்றங்களில் நேரடி விசாரணையை நிறுத்தி வைத்தும் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக தடைவிதித்தும் உயர்நீதிமன்ற பதிவாளர் உத்த ரவு பிறப்பித்திருந்தார். தற்போது  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அனைத் துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் நீதிமன்ற செயல்பாடுகள் முடக்கி வைக்கப் பட்டுள்ளது என்பது கவலைக் குரியதாகும். மக்கள் நீதிமன்றங் கள் மூலம் தங்களது உரிமை களை பெற முடியாமல் சிரமப் படும் நிலை உள்ளது.  எனவே, பொறுப்பு தலைமை நீதிபதி, வழக்கறிஞர் சங்கங்க ளோடு கலந்து ஆலோசனை செய்து நேரடி விசாரணையை தொடங்க உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரி வித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் : அனைத்து  கட்சியினருடன்  மதுரை ஆட்சியர் ஆலோசனை

மதுரை, ஜன. 28-  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொ டர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் வெள்ளியன்று ஆலோசனை நடத்தினார்.  இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணை யாளர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் திமுக, அதிமுக, சிபிஎம், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் 16 இடங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 200 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்கு சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வை யாளர்கள், வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியி டும் வேட்பாளர் உட்பட 3 நபர்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது’’ என கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:  அரசியல்  கட்சியினருடன் தேனி ஆட்சியர் ஆலோசனை

தேனி, ஜன.28- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடை பெறவுள்ளதை முன்னிட்டு, அங்கீ கரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதி களுடன் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலு வலர் மற்றும்  மாவட்ட ஆட்சியர்  தெரி வித்ததாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 6 நகராட்சிகளில் உள்ள 177 வார்டு உறுப்பினர் பதவி இடங்க ளுக்கும் மற்றும் 22 பேரூராட்சிகளில் உள்ள 336 வார்டு உறுப்பினர்  பதவி இடங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற வுள்ளது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் 1,63,542 ஆண் வாக்காளர்களும், 1,72,993 பெண் வாக்காளர்களும், 98 இதர வாக்கா ளர்களும் என மொத்தம் 3,36,633 வாக்கா ளர்களும், 22 பேரூராட்சிகளில் 1,36,127 ஆண் வாக்காளர்களும், 1,42,183 பெண் வாக்காளர்களும் 31 இதர வாக்காளர்க ளும் என மொத்தம் 2,78,341 வாக்காளர்க ளும் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை யும், கொரோனா நோய்த் தொற்றின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாக வும் நடைபெற அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பினை அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவ ணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தங்க ராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முத்துக்குமார், தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி 

திருவில்லிபுத்தூர், ஜன.28- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலு க்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுர கிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை தை மாதப் பிரதோ ஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வா கத்தின் சார்பில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைக் பின்பற்றிக் கோவிலுக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில்  அலைக்கழிக்கப்படும் பயனாளிகள்

தேனி, ஜன.28- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி என பயனாளிகளை இருமுறை  வரவழைத்து பணம், தங்கம் கொடுக்காமல்   அலைக் கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள் ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதி யில் பட்டப்படிப்பு முடித்த பெண்களும், 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்த பெண்க ளும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு கடந்த 27 ஆம் தேதி தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடை பெறுவதாக பயனாளிகளிடம் சமூக நலத் துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.  இதற்காக வைகை அணை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்பதிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. அதனைத்தொடர்ந்து பயனாளி கள் விழா நடைபெறும் தனியார் மண்ட பத்திற்கு வந்திருந்தனர். ஆனால் அங்கு திருமணம் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருந்ததால், அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்ட பயனாளிகள் விழா 28 ஆம் தேதி  நடைபெறுவதாக அறிவித்திருந்தனர்.  அதன்படி வெள்ளிக்கிழமை காலை மண்டபத்திற்கு முன்பு 30க்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்தனர். ஆனால் அந்த மண்டபம் பூட்டப்பட்டிருந்ததால் பயனா ளிகள் ஆத்திரமடைந்தனர். பயனாளிகள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கவில்லை என்று பயனாளிகள் புகார் தெரிவித்து வரு கின்றனர். 

;