நாகர்கோவில், டிச.12- கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மெது கும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங் கோட்டில் அமைந்துள்ளது தமிழ்பெரும்புலவர் அதங் கோட்டாசான் திருவுருவச் சிலை. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இச்சிலைக்கு பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் பு.அலர்மேல் மங்கை ஞாயிறன்று (டிச.12) மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தினார். அதங்கோட்டாசான் என்ற ழைக்கப்பட்ட தமிழ்பெரும் புலவர் கி.மு-7-ஆம் நூற்றாண் டில் கன்னியாகுமரி மாவட்டத் தின் மேற்கு திசையில், வள்ளு வன்கோடு என அழைக்கப்பட்டு, மருவி தற்போது, விளவங்கோடு என்றழைக்கப்படும் பகு திக்குட்பட்ட குளப்புறம் கிரா மத்திற்கு அருகில், தற்போதைய முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு எனும் கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து,
தமிழ் வளர்க்க அரும்பணியாற்றியவர். அப்போதைய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த, கபாட புரத்தில் உள்ள தமிழ் சங்கத்தில் இணைந்து தமிழ் பணி ஆற்றி னார். குறிப்பாக, தமிழ் இலக்கி யங்களில் ஒன்றான தொல் காப்பியத்தை வளர்த்து, அன்றைய அரசவையில் தமிழ் கவிஞராகவும் விளங்கியவர், தமிழ் பெரும்புலவர் அதங் கோட்டாசான். மேலும், அகத்திய முனிவரின் முக்கியமான 12 சீடர்க ளில் தலைசிறந்த ஒருவராகவும் திகழ்ந்தார். மேலும், இவர் பிறந்த ஊரான அதங்கோட்டில் தமிழ்பெரும் புலவர் அதங்கோட்டாசானை நினைவு கூரும் வகையில் வரு டந்தோறும், டிசம்பர் 12 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஞாயிறன்று அதங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்ம நாபபுரம் உதவி ஆட்சியர், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், கிள்ளி யூர் வட்டாட்சியர் திருவாழி, அதங்கோட்டாசான் அறக் கட்டளை சார்பாக, தலைவர் முனைவர் கொ.கோவிந்தநாதன், புலவர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.