சென்னை,மார்ச் 31- சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,790 ஆக இருந்தது. வியாழனன்று(மார்ச் 31) ரூ.4,793 ஆக உயர்ந் திருக்கிறது. ஒரு சவரன் ரூ.38,320-ல் இருந்து ரூ.38,344 ஆக அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்ந்தது. வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. ஒரு கிராம் ரூ.71.90-ல் இருந்து ரூ.71.30 ஆகவும், கிலோ ரூ.71,900-ல் இருந்து ரூ.71,300 ஆகவும் குறைந்துள்ளது.