காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 12-ஆவது வார்டு திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பன்னீர்வேலை ஆதரித்து கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.நாகராஜன், ஏரியா குழு உறுப்பினர்கள் எச்.ஸ்ரீராமன், முருகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கம்பம் நகராட்சி 26 வது வார்டு வேட்பாளர் கே.ஆர்.லெனின் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
மானாமதுரை நகர் மன்ற 27-ஆவது வார்டு நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடிக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பரமக்குடி நகர்மன்ற 16வது வார்டு சிபிஎம் வேட்பாளர் வினோதினி வார்டுக்கு உட்பட்ட காந்திஜி ரோடு பகுதியில் வாக்கு சேகரித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சிவாஜி, தாலுகா செயலாளர் டி.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜ்குமார் மற்றும் சிவா பசலை நாகராஜன், கண்ணன், எஸ்.ஆர்.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை 4வது வார்டு நகராட்சி மன்றதேர்தலில் கிழக்கு தெருவில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிவேட்பாளர் எம்.சூரியகலாவுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடேஷ், திமுக நிர்வாகி கென்னடி, ம திமுக நிர்வாகி சங்குத் து ரை, சிபிஎம் தாலுகா செயலாளர் மகாலிங்கம் ,மாதர் சங்க நிர்வாகி உடையாள் மற்றும் வர குணசேகரன், விக்டர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.