districts

img

பொது வேலைநிறுத்த ஆர்ப்பாட்டங்கள்

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்  சிபிஎம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மின் ஊழியர்கள், எல்ஐசி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் மற்றும் தோழமை கட்சியினர் கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க புதுக்கோட்டை கிளைத் தலைவர் வி.லதாராணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் தஞ்சை கோட்டத் துணைத் தலைவர் என்.கண்ணம்மாள், முன்னாள் கோட்டத் துணைத் தலைவர் எம்.அசோகன், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.ராஜேந்திரன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பேசினர்.


அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி,  எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் தலைவர் ஆர்.மகேந்திரன்,  ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் டி.விஜயகுமார், ஹெச்எம்எஸ் மாவட்ட செயலாளர் எஸ்.இராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.


அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து நாகப்பட்டினம் நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பி.கண்ணபிரான் பா.விஜயகுமார், சா.யோகசுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் டி.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.