மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு மதுரை நகர தொழிலாளர்கள், பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று வளர்ச்சி நிதி திரட்டி வருகிறது. அடிப்படை பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் என்பதால் மகிழ்வோடு நிதியளித்துள்ளனர் மக்கள். இது வரை ரூ. 6 லட்சத்து 54 ஆயிரம் வழங்கினர். நிதி திரட்டலில் கட்சி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், இடைக்கமிட்டி செயலாளர்கள், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.