districts

img

இந்தியா கூட்டணிக்கே, பார்வர்டு பிளாக் ஆதரவு

சென்னை, ஏப்.14- மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள்  ஆதரவு தெரிவித்து  வருகின்றனர். அந்த வகையில் அகில இந்  திய பார்வர்ட் பிளாக் கட்சியும் தமது ஆத ரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்தியக் குழு  தலைவர் நரேன் சாட்டர்ஜி, பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்களவைத் தேர்தலில் தேசிய அள வில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களையும் ஆத ரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.