districts

முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனிடம் மதுரை சரக டிஐஜி நேரில் விசாரணை

விருதுநகர், டிச.30- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி உள்ள சூழ்நிலையில், அவரது ஆத ரவாளரான சாத்தூர் சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜ வர்மன் மற்றும் அதிமுக நிர்வாகிகளி டம் மதுரை சரக டி.ஐ.ஜி காமினி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் நேரில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான கே.டி.இராஜேந்திரபாலாஜி மீது பணம் மோசடி புகார்கள் வந்த வண் ணம் உள்ளன. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி புகாரில் அவர் உள்பட அதிமுக பிர முகர்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யாமல் இருக்க இராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆனால் இராஜேந்திரபாலாஜி எங்கு இருக்கி றார்? என்பதை இதுவரை தனிப்படை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் மதுரை, திருப்பத் தூர், வேலூர், கோவை மற்றும் பிற மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தில்லி பகுதிகளுக்கும் தனிப்படை காவல்துறையினர் சென்றுள்ளனர். அங்கு அவர் பதுங்கியுள்ளாரா? என தீவிரமாக தேடி வருகின்றனர்.  

மேலும் அதிமுக பிரமுகர்களின் கைப்பேசி உரையாடல்களை இரக சியமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இராஜேந்திரபாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களின் கைப்  பேசிகளும் தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் கள் ஏழுமலை, விக்னேஸ்வரன் ஆகி யோர் மீது தனிப்படை காவல்துறை யினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவர்களை பிடித்து விசா ரணை நடத்தினர். இந்த நிலையில், சாத்தூர் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனை விசார ணைக்காக வரும்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் அழைத்த னர். அதன்படி அவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மனோகர் ஆகியோர்  3 மணி நேரம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை விசார ணைக்கு அழைத்ததால், அவரது ஆதரவாளர்கள் 50 பேர் குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர்.   மேலும், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் அவரது சகோத ரர்கள், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது. 3 மணி நேர விசாரணைக்குப் பின் இராஜவர்மன் குற்றப்பிரிவு அலுவல கத்திலிருந்து வெளியே வந்தார். அப் போது அங்கிருந்த செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது:  என்னிடம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எங்கிருக்கிறார்? என காவல்துறையினர் கேட்டனர். எனக்கு தெரியாது எனக் கூறினேன். மேலும், அவர் உடல் நிலை சரியில்லா தவர். எனவே, முன் ஜாமீன் கோரி யுள்ளார். வர வேண்டிய நேரத்தில் வரு வார் என பதில் கூறினார். கலக்கம் அதிமுக நிர்வாகிகள் பலரிடம், குற்றப்பிரிவு காவல்துறையினர் விசா ரணை நடத்த தொடங்கியுள்ளதால் அதிமுகவினர் பலர் கலக்கமடைந் துள்ளனர்.