கோவை, ஜன. 6- கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமலான நிலையில், கோவையில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் பிற மாவட்ட மாணவர்கள், தொழிலாளர் கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட் டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் உணவ கங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் உள்ள கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளை யம், உக்கடம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்தந்த பேருந்து நிலையங்க ளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து ஊழி யர்கள் மற்றும் போலீசார் கூட்டத்தை தவிர்க்குமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.