திருச்சூர், பிப்.6- திருப்புனித்துறை ஸ்ரீ பூர்ணத்ர ஈசன் கோயிலில் பிராமணர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்வதாக வந்த செய்தி குறித்து, தேவஸ்வம் அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் உடனடி அறிக்கை கேட்டுள்ளார். இதுகுறித்து கொச்சி தேவசம் போர்டு தலை வர் வி.நந்தகுமாருடன் அமைச்சர் தொலைபேசியில் அழைத்தும் விளக்கம் கேட்டார். மறுமலர்ச்சி கேரளாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்த கைய பழமையான நடைமுறை களை தவிர்க்க தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். நாக ரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத இதுபோன்ற நடைமுறை களை மற்ற தேவசம்போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் கூறினார்.