districts

img

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொடியேற்று விழா

திருவில்லிபுத்தூர், ஜூலை 24-   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்  ஆடிப்பூர தேரோட்டம் இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு வெகு விமர்சையாக ஆகஸ்ட் 1 தேதி நடைபெற உள்ளது.விழா  நிகழ்ச்சிகள் ஞாயிறன்று காலை கொடி யேற்றத்துடன் துவங்கியது. கொடியேற் றத்தை முன்னிட்டு ஆண்டாள் ரங்கமன்னா ருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.   ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள  கொடிமரம் மலர்களாலும் மின் விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்டது.  அதிகாலை யில் கொடி பட்டம் மாடவீதி 4 ரத வீதிகள் வழி யாக மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டது. பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தபடி 9 மணி முதல் 10 மணிக்குள் கொடி யேற்ற நிகழ்ச்சி துவங்கின. கொடி யேற்றத்தை ஆண்டாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி துவக்கி வைத்து கொடியேற்றி னார். இன்று முதல் 31 ஆம்   தேதி வரை  தினமும் ஆண்டாள் ரங்க மன்னர் பல்வேறு  அலங்காரங்களில் எழுந்தருளி காட்சிய ளிக்கிறார். கொடியேற்றத்துடன் விழா தொடங்கியதால் ஆண்டாள் கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்றத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் இரவிச்சந்திரன் ,ஆணையர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி முத்து ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்த னர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.