இராமநாதபுரம், மார்ச் 2- இராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் மூன்றாம் பாலினத்தவர் 5 பேருக்கு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் காசோலைகளை வழங்கினார். இராமநாதபுரம் மாவட்டத் தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலத்துறையின் சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக் காக அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2020-21 ஆம் நிதி யாண்டில், திருநங்கைகளுக்கு சுயதொழில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஐந்து திருநங்கை கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அழகுநிலை யம், ஜவுளி வியாபாரம், மளிகைக் கடை, உணவகம் மற்றும் பேன்சி ஸ்டோர் போன்ற சுய தொழில்கள் செய்வதற்கு ஒரு திருநங்கைக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஐந்து திருநங்கைகளுக்கு ரூ.2,50,000 மதிப்பிலான காசோலைகளை புதனன்று மாவட்ட ஆட்சியர் சங் கர் லால் குமாவத் வழங்கினார்.