districts

img

பணியின் போது பெண் காவலர் மயங்கி விழுந்து மரணம்

மதுரை, ஜன.23-  மதுரை எச்.எம்.எஸ். காலனி பகுதி யை சேர்ந்த கலாவதி என்பவர் எஸ்.எஸ். காலனி காவல்நிலை யத்தில் தலைமை பெண் காவலராக பணி புரிந்து வந்தார்.   சனிக்கிழமை இரவு பணியின் போது திடீரென கலாவதிக்கு மயக்கம் ஏற்பட் டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூல மாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்த போது பெண் காவலர் உயி ரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பணியில் பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரி ழந்த சம்பவம் காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் காவலருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  காவல்நிலையங்களில் இரவு நேர பணி ஒதுக்கீட்டை பெண் காவலர்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என  பெண் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இறந்த பெண் காவலருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினர் ஞாயிறன்று மாலை அணிவித்து அஞ் சலி செலுத்தினர்.