மதுரை, ஜூலை 16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட 23 ஆவது மாநாடு அவனி யாபுரம் எஸ்.எம்.கே. மஹா லில் தோழர்கள் கே.வரத ராசன், கே.தேவராஜ் ஆகி யோர் நினைவு அரங்கத்தில் புதன்கிழமையன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோ வன் தலைமை வகித்தார். வர வேற்புக்குழு செயலாளர் ஏ. தனபாலன் வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.நாகேந்திரன் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் வேலை அறிக் கையும் மாவட்ட பொருளா ளர் வி. அடக்கிவீரணன் வரவு- செலவு அறிக்கையும் சமர்ப் பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநிலச் செயலாளர் ஏ. விஜயமுருகன் நிறைவுரை யாற்றினார். பி.குமரவேல் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில், புதிய நிர்வா கிகள் தேர்வு மாவட்டத் தலை வராக ஏ. வேல்பாண்டி, மாவட்டச் செயலாளராக எஸ்.பி. இளங்கோவன், மாவட்ட பொருளாளராக வி. அடக்கிவீரணன், துணைத் தலைவர்களாக பி.அய் யாவு, கே.ராஜேந்திரன், எம். சித்ரா, துணைச் செயலா ளர்களாக பி.எஸ்.முத்துப் பாண்டி, பி.தனசேகரன், பி. நாகேந்திரன் உட்பட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் முழு வதும் கண்மாய்கள், குளங் கள், நீர் வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி மறுசீரமைக்க வேண்டும். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யை உடனடியாக திறந்து அர வையை துவக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ண யிக்க வேண்டும். மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆற்று கிளை கால்வாய் களை சுத்தப்படுத்தி ஆற்றின் இரு கரைகளிலும் வாகனம் செல்லக்கூடிய அளவில் சாலை அமைக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலை யத்தை தாலுகா அளவில் ஒரு இடத்திற்கு ஆண்டு முழுவ தும் செயல்படுத்த வேண் டும். சோழவந்தான் மதகு அணை மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.