சென்னை,மார்ச் 9- காவிரியின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை யும் மீறி அணைக் கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் கர்நாடக மாநில பாஜக அரசின் அடாவடித்தனத்தை கண்டித்து மார்ச் 17 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக கர்நாடக மாநில பாஜக அரசு, தொடர்ந்து செயல்பட்டு வருகி றது. தமிழ்நாட்டிற்கு மாதவாரியாக எவ்வளவு தண்ணீரை திறந்து விட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை திறந்து விடுவதில்லை. '
காவிரியில் கர்நாடக அரசு புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, நான்கு மாநிலங்களின் சம்மதம் காவிரி மேலாண்மை ஆணையத் ்தின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்று தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு மாறாக, காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டியே தீருவோம் என்று தடாலடியாக அறிவிப்புகளை கர்நாடக மாநில பாஜக வெளியிட்டு வருகிறது. இந்த அத்து மீறலை எதிர்த்து தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து கட்சி தலை வர்களும் ஒன்றிய அரசின் நீர்வள த்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக மாநில அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போது, மாநில நிதிநிலை அறிக்கையில் மேகதாட்டு அணை கட்டுவதற்கென்று ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணை கட்டப்பட்டால் பாசனம், மற்றும் குடிநீருக்கு போதுமான நீர் கிடைக்காமல் தமிழகம் பாலை வனமாகிவிடும். மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி அணை கட்டு மானப் பணிகளுக்கான ஒப்புதலை பெற ஒன்றிய அரசை நிர்ப்பந்திக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநில பாஜக அரசின் இந்த செயல் முழுக்க முழுக்க சட்ட விரோத மானதாகும். ஒன்றிய பாஜக அரசு இதில் தலையிட்டு கர்நாடக மாநில அரசின் தமிழ்நாட்டிற்கு விரோத மான போக்கை தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது. வழக்கில் எத்தகைய தீர்ப்பு வர இருக்கிறது என்று தெரியா மலேயே நிதி ஒதுக்கீடு செய்வது சட்டத்தை மதிக்காத அடாவடித் தனமான செயலாகும் என்பதை கர்நா டக மாநில அரசுக்கு சுட்டிக்காட் டுகிறோம். கர்நாடக மாநில அரசுக்கு நமது கண்டனத்தை தெரிவிக்கும் வகை யிலும், இந்திய ஒன்றிய பாஜக அரசு இதில் தலையிட்டு மேகதாட்டு அணை கட்டுவதை தடுத்த நிறுத்த வேண்டு மென்று வலியுறுத்தி மார்ச் 17 அன்று நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடு துறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட மற்றும் ஒன்றிய தலைநகரங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை காக்க நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சண்முகம் தெரிவித்தி ருக்கிறார்.