சின்னாளப்பட்டி, ஏப்.30- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கோனூர் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். வாழை மரத்தில் குலை தள்ளி ஒரு மாத காலத்தில் அறுவடை செய்யவிருக்கும் நிலையில் இருந்தது. கடந்த சில தினங்களாக திண் டுக்கல்லில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 90 சதவீத வாழை மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த கிராமத்தில் மட்டும் ரூ.80 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வேதனையில் உள்ளனர். வாழை சேதம் குறித்து அரசிடம் மனு அளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயி கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செய லாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தயாளன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக் கையில், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முழுவதும் உள்ள வாழை விவசாயிகள் தங்களது மரங்கள் சாய்ந்து சேதமானதாக அதிகாரிகளிடம் தெரிவித்ததற்கு , சாக்குப் போக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கி றார்கள். இந்த நிலையை அதிகாரிகள் மாற்ற வேண்டும் .விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் .இல்லை யெனில் விவசாயிகளை திரட்டி போராட் டத்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ள னர். இதுசம்பந்தமாக கோனூருக்கு வந்தி ருந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமியிடம் மனு கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.