districts

மதுரை முக்கிய செய்திகள்

ராணுவத்தில் சேர ஆன்லைன்  பதிவுக்காலம் நீட்டிப்பு 

இராமநாதபுரம், மார்ச் 29- திருச்சி மண்டல இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்ததாவது: இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள்.  பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்  றங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில்  joinindian army.nic.in   (இந்திய ராணுவத்தில்  சேரவும்) இணைய தளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இரண்டாம் கட்டத்தில் பட்டியலிடப்பட்ட விண்ணப்ப தாரர்கள் அந்தந்த இராணுவ ஆட்சேர்ப்பு அலுவல கங்களால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உடல்தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டு  சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதி யாக மூன்றாம் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்ப தாரர்கள் பேரணி நடைபெறும் இடத்தில் மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20.03.2023 வரை இருந்து வந்த நிலை யில் தற்பொழுது 31.03.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. பதிவு செய்யும் செயல்முறை முந்தையதைப்போலவே உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் அட்டை  அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

திருவில்லிபுத்தூர், மார்ச் 29- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சொந்தமான வாழைக்குளம் கிராமத்தில்  உள்ள நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார் செவ்வாய்க்கிழ மையன்று வயலுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.  அவரது மகன் சுந்தர்ராஜ் புதன்கிழமையன்று காலை யில் வயலுக்குச் சென்ற போது,  வாய்க்காலில்  அறுந்து  விழுந்த மின்வயர்  மீது சுந்தரம் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜ் மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.  அவரை திருவில்லிபுத்தூர் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின்பேரில்  மம்சாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மாடி தோட்டத்தில்  கஞ்சா செடி வளர்த்தவர் கைது

மதுரை, மார்ச் 29-  மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு  உட்பட்ட மேலமடை பகுதியில் கடந்த சில தினங்களாக கஞ்சா விற்பனை அதிக அளவு நடைபெற்று வருவதாக  தொடர்ந்து புகார் வந்ததுள்ளது இந்த நிலையில் மதுரை மாநகர காவல் துறையினர்  அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது அதேபகுதிதை சேர்ந்த கார்த்திக் என்பவர் வீட்டில் மாடி  தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அதிரடியாக கார்த்திக் என்ற வாலி பரின் வீட்டின் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த மாடி தோட்டத்தில் மூன்று கஞ்சா செடிகளை வைத்து வளர்த்து  வந்தது தெரிய வந்தது .வாலிபரிடம் நடத்திய விசார ணையில் சாலை விபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போன நண்பன் கொடுத்த விதை என்றும் நண்பனை நினைவாக இந்த செடியை வளர்த்து வரு வதாகவும் தெரிவித்துள்ளார் அதனைத் தொடர்ந்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த அண்ணா நகர் காவல் துறையினர்,  கார்த்தி கேயனை கைது செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள்  குறைதீர் கூட்டம் 

ஒட்டன்சத்திரம், மார்ச் 30- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள  கள்ளிமந்தையத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.  ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள  மாற்றுத்திறனாளி களிடம் இருந்து  மூன்று சக்கரம் வாகனம் பெறுதல், வேலை  வாய்ப்பு, வீட்டுமனைபட்டா, வங்கி கடன், தையல் இயந்தி ரம், தொகுப்பு வீடு, இலவச பேரூந்து பயணம் அடையாள அட்டை பெறுதல் உள்ளிட்ட உபகரணங்கள் கேட்டு 457  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங், ஒன்றிய செயலாளர்கள் ஒட்டன்சத்திரம் சிவக்குமார், தொப்பம்பட்டி காளீஸ்வா மற்றும் ஒட்டன்சத்திரம் கூட்டு றவு வேளாண்மை விற்பனை சங்கத்தலைவர் ராஜா மணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்  ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் காதொலி கருவி,  மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.

தேனியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 29- ராகுல்காந்தியின் எம்பி.பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தேனி காம ராசர் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் எஸ்சி. எஸ்டி.பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இனியவன் தலைமை வகிக்க, சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜா முகமது முன்னிலை வகித்தார்.காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன் உரையாற்றினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் முனியாண்டி , நகரத் தலை வர் கோபிநாத், வட்டாரத் தலைவர் முருகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேனி, மார்ச் 29- ராகுல்காந்தியின் எம்பி.பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தேனி காம ராசர் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் எஸ்சி. எஸ்டி.பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இனியவன் தலைமை வகிக்க, சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜா முகமது முன்னிலை வகித்தார்.காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன் உரையாற்றினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் முனியாண்டி , நகரத் தலை வர் கோபிநாத், வட்டாரத் தலைவர் முருகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போடி, தேவாரத்தில் கஞ்சாவுடன் 2 பேர் கைது

போடி, மார்ச் 29-  போடி, தேவாரத்தில் கஞ்சா வைத்தி ருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  தேனி மாவட்டம், போடி, தேவாரம் பகுதிகளில் கஞ்சா பதுக்கலை தடுக்க போலீ சார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் போடி புதூர் சிறிய தேவர் சிலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றி ருந்த போடி புதூர் போயன்துறை சாலை யில் வசிக்கும் லட்சுமணபெருமாள் மகன்  ஜோதிபாசு (35) என்பவரை பிடித்து விசா ரித்தனர். இதில் விற்பனை செய்வதற் காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்  தது. கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.15 ஆயிரமும் வைத்திருந்துள்ளார்.  இதுகுறித்து போடி நகர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து ஜோதிபாசு வை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா விற்  பனை செய்த பணத்தை பறிமுதல் செய்து  விசாரித்து வருகின்றனர்.  இதேபோல் தேவாரம் போலீஸார் தே.ரெங்கநாதபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றபோது இரு சக்கர வாக னத்தில் வந்த தேவாரம் மூனாண்டிபட்டி யை சேர்ந்த ராஜாங்கம் மகன் முத்து வீரன் (48) என்பவரை பிடித்து விசாரித்த னர். அவரிடம் மூன்றரை கிலோ கஞ்சாவும்,  கஞ்சா விற்பனை செய்த ரொக்க பணம்  ரூ.17 ஆயிரமும் இருந்தது தெரிந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த தேவாரம் போலீஸார் முத்துவீரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கஞ்சா, இரு சக்கர வாகனம், ரொக்க பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

வரதட்சணைக்கொடுமை 3 பேர் மீது வழக்கு பதிவு

தேனி, மார்ச் 29- சின்னமனூர் அருகே வரதட்சணை கொடுமை செய்த கணவன் உள்ளிட்ட 3 பேர் மீது உத்தமபாளையம் அணைத்து மக ளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே வெள்ளையம்மாள்புரம் ரைஸ் மில் தெரு வை சேர்ந்தவர் கவிதா(26). இவருக்கு 16 வயது இருக்கும் போதே கார்த்திக்(35) என்பவருடன் திருமணம் செய்து வைத் துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.  திருமணத்தில் இருந்தே கணவர் சரி வர வேலைக்கு செல்லாமல் குடும்ப தேவைக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் தனது மனைவியை  உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்து  வந்துள்ளார். மேலும் அவரது நகைகளை யும் பறித்து வைத்துக்கொண்டு தராமல் இருந்துள்ளார். இதுகுறித்து உத்தம பாளை யம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் கவிதா புகார் அளித்தார். அதன் பேரில் கார்த்திக், அவரது தந்தை சோனை முத்து, தங்கை சோபனா(28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

பெரியகுளம் ,ஆண்டிபட்டியில் மழை  கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி, மார்ச் 29- பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று இரவு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித் துள்ளனர்.  பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டி பட்டி, கடமலைக்குண்டு, வருச நாடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று  சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது. அதன்பிறகும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை  பெய்தது. வடுகபட்டி, முதலக்கம்பட்டி,  ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவ தானப்பட்டி, புதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதி களில் இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல்  மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக் கானல் அடுத்துள்ள வட்டக்கானல், வெள்ளக்கவி பகுதியில் பெய்த கனமழை காரண மாக கும்பக்கரை அருவியில் வெள்  ளப்பெருக்கு ஏற்பட்ட தால் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு அருவியில் குளிக்க தடை  விதிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்த நிலை யில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப் பட்டது. ஆனால் செவ்வாய்க்கிழமை பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்ததால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பய ணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்  பட்டது. இதன் காரணமாக அருவியில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்து டன் திரும்பிச் சென்றனர்.  நீர்மட்டம்  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. நீர்  வரத்து 72 கன அடி. திறப்பு 256 கன அடி.  இருப்பு 2024 மி.கன அடி. வைகை அணை யின் நீர்மட்டம் 54.17 அடி. நீர்வரத்து 349 கன  அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2586 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம்  37.05 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 49.53 அடி. வரத்து 13 கன அடி.  திறப்பு 3 கன அடி.  மழையளவு  பெரியாறு 7, தேக்கடி 15.6, கூடலூர் 1,  சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளை யம் 1.2, வைகை அணை 30.2, மஞ்சளாறு 10, பெரியகுளம் 3, வீரபாண்டி 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

மதுரையில் பெண் குழந்தையை விற்க முயன்ற 4 பெண்கள் கைது

மதுரை, மார்ச் 29- மதுரையில் பெண் குழந்  தையை சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.   மதுரை அரசு  ராஜாஜி  மருத்துவமனை குழந்தை கள் பிரிவில் செவ்வாயன்று  பச்சிளம் பெண் குழந்தை யை இரு பெண்கள் சிகிச்  சைக்காக கொண்டு வந் துள்ளனர். அப்போது வார்  டில் பணியில் இருந்த செவி லியர்கள் குழந்தையின் தாயார் குறித்து கேட்டபோது, இரு வரும் முன்னுக்குப்பின் முர ணாக பதிலளித்தனர்.இத னால் சந்தேகமடைந்த செவி லியர்கள்   அரசு மருத்துவ மனை  காவல்துறையிடம் தக வல் தெரிவித்தனர். குழந்தை யை  கொண்டு வந்த பெண் ணை காவல்நிலையம் அழைத்  துச் சென்று விசாரித்தனர். விசாரணையில்,  அந்தப் பெண்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  நடுப்  பட்டியைச் சேர்ந்த சின்ன பாண்டி மனைவி பாண்டி யம்மாள்(60) என்பது தெரிய வந்தது.

மேலும் குழந்தை  தொடர்பாக விசாரித்த போது, உசிலம்பட்டி அருகே  உள்ள அன்னமார்பட்டியைச் சேர்ந்த தனது உறவினரான மாலதி என்ற பெண், பிறந்து இரு நாள்களேயான  பெண்  குழந்தையை தன்னிடம் கொடுத்து குழந்தையை விற்  பனை செய்து கொடுத்தால் அந்தப் பணத்தை இருவரும் பிரித்து எடுத்துக் கொள்ள லாம் என்று கூறி மார்ச்  25ஆம் தேதி குழந்தையை கொடுத்துவிட்டுச் சென்ற னர். குழந்தையை தானும்,  மகள் அழகு பாண்டியம்மா ளும் பராமரித்து வந்தோம். குழந்தைக்கு மூச்சுத் திண றல் ஏற்பட்டதால் அரசு மருத்  துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தோம். காவல் துறையிரை  கண்டவுடன் தனது மகள் அங்கிருந்து சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி, குழந்தையை சட்ட விரோதமாக விற்க முயன்ற தாக பாண்டியம்மாள்(60),  மாலதி(40), பாண்டியம்மா ளின் மகள் அழகுபாண்டி யம்மாள்(35), பாண்டியம்மா ளின் சகோதரி சின்ன பாண்டி யம்மாள்(45) ஆகிய நால்வ ரையும் கைது செய்தனர். மேலும் மாலதி எவ்வித மருத்துவப்படிப்பும் இன்றி  கிராமப்புறங்களில் வீடு களுக்குச் சென்று பிரசவம் பார்த்து வருவதால் குழந்  தைகளை விற்கும் கும்பலு டன் தொடர்பு உள்ளதா என் பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.  மேலும் குழந்தையின் தாயைத் தேடி உசிலம்பட்டி மற்றும் திருப்பூருக்கு விரைந்துள்ள  காவல்துறை, குழந்தையை வாங்கிக் கொள்வதாகக் கூறிய விருது நகரைச் சேர்ந்தவரையும் தேடி வருகின்றனர்.

கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை ஆட்சியர் வழங்கினார்

விருதுநகர், மார்ச் 29- விருதுநகர் மாவட்டத்தில் பணியிடத்தில் மரணம டைந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.  தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 18  அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திரு மண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்  கண்ணாடிகளுக்கான உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூ தியம், இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில். தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பணியிடத்தில் மரணமடைந்த சந்திரன், மாரியப்பன், ராஜேந்திரன் மற்றும் சோலைமணி ஆகிய 4 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் தலா ரூ.5 லட்சம்  வீதம் மொத்தம் ரூ.20 இலட்சத்தை ஆட்சியர் வழங்கி னார். இதில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்  கம்) காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கள்ள நோட்டு வழக்கில்  29 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத கும்பல் கைது

சிவகாசி, மார்ச் 29- கள்ள ரூபாய் நோட்டு வழக்கில் கைதாகி 29 ஆண்டுகள்  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மூவரை சிவகாசி  போலீசார் கைது செய்து கர்நாடகா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த 1994 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பச வேஷ்சவுக் நிப்பான் காவல் நிலையத்தில் கள்ள ரூபாய்  நோட்டுக்களை மாற்றியதாக சிவகாசி செல்லியார்அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (51), முனீஸ்வரன் காலனி யை சேர்ந்த பாண்டியன் என்ற பாண்டி (60), விருதுநகர்  ரோசல்பட்டி ரோட்டை சேர்ந்த மூவேந்தர் என்ற மகேந்திரன்  (61) ஆகிய மூவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்  கானது சிக்கோடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால். மூவரும் கடந்த 29 ஆண்டுகளாக நீதிமன்ற  விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால். சிக்கோடி மாவட்ட நீதிமன்றம் 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக காவல்துறை கேட்டுக் கொண்டதன் பேரில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய சார்பு  ஆய்வாளர் சுபக்குமார் தலைமையிலான தனிப்படை யினர் மூவரையும் கைது செய்தனர். பின்பு. சிவகாசி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கர்நாடகா போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

விருதுநகர், மார்ச் 29- விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு பால்கொள்முதல் நிலையை உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பால் மற்றும் பால்பவுடர் வழங்க வேண்டும். மானிய விலையில் மாட்டுத் தீவனங்கள் வழங்குவ தோடு. ஆவின் பாலகத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்க்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியார்கள் சங்கத்தினர் விருது நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்பேராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குமராண்டி தலைமை யேற்றார்.துவக்கி வைத்து மாவட்ட செய லாளர் எஸ்.மனோஜ்குமார் பேசினார். மாநில துணைச் செயலாளர் வெண்மணி சந்திரன் கண்டன உரையாற்றினார். மேலும்  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், மாவட்ட செயலாளர் வி.முருகன். மாவட்ட  நிர்வாகிகள் கே.சுப்பாராஜ், பெருமாள் ராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
 

 

 

;