நூல் விலை உயர்வைக் கண்டித்து மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் மே 25-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை ஆதரித்து சத்திரப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், ஆர்.சோமசுந்தரம், ஒன்றியச் செயலாளர் முனியாண்டி ஜீவானந்தம் பழனிசாமி உலகநாதன் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.