தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில், சுற்றுப்புறச் சூழல் இயற்கை வளத்தை பாதுகாக்க சுமார் 1,000 கிலோ எடையுள்ள மின்னணு கழிவுப் பொருட்கள் “இ-வேஸ்ட் கலெக்சன்” என்னும் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்டது. பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பொதுமக்களி டமிருந்து பயன்படுத்தப்படாத கழிவு செய்யப்பட்ட க ம்ப்யூட்டர்கள், மோடம், லேப்டாப், சார்ஜர், பழைய, உடைந்த செல்போன்கள், வாஷிங் மெஷின், யூபிஎஸ், பயன்படுத்த முடியாத அனைத்து வகை மின்னணு சாத னங்களை சேகரித்தனர். இந்தப் பொருட்கள் மறுசுழற்சி செய்வதற்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் லயன்ஸ் சங்கத் தலைவர் செ.ராமநாதன், செயலா ளர்கள் ஆதித்யன், பிரபு, பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழிப்புணர்வு பிரச்சாரம்