districts

img

கலசலிங்கம் பல்கலை.யில் மின்சார சிற்றுந்து தொடக்க விழா

திருவில்லிபுத்தூர். டிச.17-  திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்துடன் ஏசிஐசி - ‘‘கலசலிங்கம் புதிய தொழில்கள் துவங்க ஊக்குவிக்கும் மையம்’’ இணைந்து கலசலிங்கம் சி-டேக் ஆராய்ச்சி மையத் தில் புதியதாக வடிவமைக்கப்பட்ட ‘‘மின்சார சிற்றுந்து’’ தொடக்க விழா, பல்கலை வேந்தர் முனைவர் ஸ்ரீதரன் தலை மையில் நடைபெற்றது. புதிய மின்சார சிற்றுந்தை ஏசிஐசி - கேஐஎஃப் இயக்குநர் முனைவர் சிந்தன் வைஷ்ணவ் இயக்கி துவக்கி வைத்தார்.  விழாவில், இணைவேந்தர் டாக்டர் எஸ்.ஆறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர்கள் முனைவர் எஸ்.சசிஆன்ந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம், ஆலோசகர் எஸ்.ஞானசேகர், துணைவேந்தர் முனைவர் ஆர்.நாகராஜ், பதிவாளர் முனைவர் வெ.வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.