districts

img

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

சிவகங்கை, அக்.27- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்  தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 4, 5 மற்றும் 18, 18 ஆகிய தேதி களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Help line செயலி / https://voters.eci.gov.in  மற்றும் https://elections.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். மேலும், இந்திய தேர்தல் ஆணை யத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்  படி அக்டோபர் 27 முதல் டிசம்பர் 9 வரை வரு வாய் கோட்டாட்சியர் சிவகங்கை / தேவ கோட்டை ஆகிய அலுவலகங்கள் மற்றும்  அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களி லும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி யர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.