districts

img

கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் - மக்கள் மறியல்

மதுரை, செப் 2-  மதுரை மாநகராட்சி புதூர் பகுதி 12 வது வார்டு காந்திபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அடை ப்பு மற்றும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவ தால் அப்பகுதியில் பெரும் நோய் தொற்று பரவி வருவ தாகக் கூறி அப்பகுதி பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினருடன்  இணைந்து புதூர் பேருந்து நிலையம் அருகில் வெள்ளி யன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இது குறித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு - 2 ஆம் பகுதிகுழு செயலாளர் ஏ. பாலு கூறு கையில், கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்சனை உள்ளது. மாநகராட்சி அதி காரிகளிடம் இப்பகுதியில் உள்ள மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் தொடர்ந்து மனுக்கள் கொ டுக்கப்பட்டும் கண்டுகொள் ளாத போக்கிலேயே அதி காரிகள் உள்ளனர்.  தொடர்ந்து மழை பெய்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தான் இப்பகுதி பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.  மறியல் நடைபெற்ற இடத்திற்கு  காவல்துறை யும், மாநகராட்சி அதிகாரி களும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று நாட்க ளில் சரி செய்வதாக உறுதிய ளித்தனர்.   இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக மறியல் போராட்டம் கைவிடப் பட்டது. இந்த மறியல் போ ராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், சிந்தன், உத்த மன், ரசாக் உள்ளிட்ட காந்தி புரம் பகுதி பொதுமக்கள்  பலர் கலந்துகொண்டனர்.