districts

தேனியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்

தேனி, செப்.11-  தேனியில் முதலமைச்சர் கோப்பை -2024 மாவட்ட அள விலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் மாவட்ட அளவிலான விளையாட்டுப்  போட்டிகள் 10.9.2024 முதல் 24.9.2024 வரை நடைபெற வுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம், கைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபடி, கோ-கோ,  கூடைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், ஓட்டப்பந்தயம், செஸ், கேரம், கிரிக்கெட் போன்ற பல்வேறு போட்டிகள்  பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவி னர்கள், அரசு ஊழியர்கள் ஆகிய பிரிவுகளில் நடைபெறு கிறது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல மைச்சர் கோப்பை - 2024 மாவட்ட அளவிலான விளை யாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீ வனா, தேனி மக்களவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்  வன் ஆகியோர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன்  (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) முன்னிலையில் செவ்வாயன்று துவக்கி வைத்தனர். மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.