districts

img

அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி, மே 3- தூத்துக்குடி மாவட்டம் முழு வதும் அடுத்த இரண்டு மாதங்க ளுக்குள் பொதுப்பணித் துறை யின் பராமரிப்பின் கீழ் கட்டி டங்களில் மழைநீர் சேகரிப்பு திட்  டம் சீர்செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித் துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்  களிடம் கூறுகையில், ‘‘தூத்துக் குடி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பின் கீழ்  உள்ள பள்ளிகள், நீதிமன்ற கட்டி டங்கள், அரசு அலுவலகங்கள் மற்  றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடங்களாக சுமார் 3200 உள்ளன.  இதில் 1400 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மேலும், இத னைத் தொடர்ந்து, பிறத்துறை கட்டிடங்கள், பள்ளிகள், நீதி மன்ற கட்டிடங்கள், அரசு அலுவல கங்கள் மற்றும் அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் இரண்டு  மாதங்களுக்குள் மாவட்டம் முழு வதும் சீர்செய்யப்படும் என தெரி வித்துள்ளார்.