districts

img

மகளிர் இலவச பேருந்துகளை அதிகம் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 7- தமிழக அரசு மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும், மகளிர் பேருந்துகள் ஓடும் நேரத்தை கணக்கிட்டு பேருந்து நேர அட்ட வணையை மாற்றியமைக்க வேண்டும். சீருடை, தையற்கூலியை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி அரசு போக்குவரத்து மதுரை தொழி லாளர் சங்கம் (சிஐடியு )சார்பில் செவ்வா யன்று மதுரை மண்டல அனைத்து பணி மனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை புறவழிச்சாலை அரசு போக்கு வரத்து தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச் செய லாளர் பி. மகாதேவன் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர்கள் டி. கே.  முரளிதரன் துவக்கிவைத்தும், எஸ். செல்வ ராஜ் நிறைவு செய்தும் பேசினர். நகர் கிளை  செயலாளர் வி. செல்வராஜ், புறநகர் கிளைச்  செயலாளர் பி. அமர் ஜோதி, மத்திய சங்க  நிர்வாகி சி. லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.