திண்டுக்கல், மார்ச் 20 திரிபுராவில் பாஜக-ஆர்எஸ்எஸ் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தைக் கண் டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பபாட்டம் நடைபெற்றது. திங்களன்று மாலை மணிக்கூண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செய லாளர் ஏ.அரபுமுகமது தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ராணி, கே.பிரபாகரன் ஒன்றியச்செயலாளர் சரத்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதி பாசு, கே.எஸ்.கணேசன், ஒன்றிய கவுன் சிலர் செல்வநாயகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் துரை.சம்பத், சிபிஐ ராஜாங்கம், காங்கிரஸ் அப்துல் காதர், கார்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக்கழகம் யாசர் அராபத், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் ஷேக்பரீத் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.