districts

img

வாலிபர் சங்க நிர்வாகியை தாக்கிய பாஜக குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூன் 24-  திருச்சியில் வாலிபர் சங்க நிர்வாகி தவ்பீக்கை தாக்கிய  கஞ்சா விற்கும் பாஜக கும்பலைக் கண்டித்து  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முத்துராஜா தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். இளையான்குடியில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட  செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் இன்னாசி ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் ஆகி யோர் பேசினர்.