districts

img

ஜனநாயக மாதர் சங்க முனிச்சாலை பகுதி மாநாடு

மதுரை, ஜூலை 6- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் முனிச்சாலை பகுதிக்குழு மாநாடு மாவட்ட துணைத்தலைவர் செல்லம் தலைமையில் நடைபெற்றது. ரஷிதா பேகம் முன்னிலை வகித்  தார். மாவட்டக்குழு உறுப்பினர்  மல்லிகா துவக்கி வைத்துப்பேசி னார். கவுன்சிலர் ஜென்னியம்மாள்  வாழ்த்திப் பேசினார். மாவட்டச்  செய லாளர் சசிகலா நிறைவுரையாற்றி னார். பகவதி நன்றி கூறினார். இதில்  13 பேர் கொண்ட புதிய பகுதிகுழு தேர்வு செய்யப்பட்டது. அத்துடன்  வில்லாபுரம் என்ற புதிய அமைப் புக்குழுவும் உருவாக்கப்பட்டது. மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.   ஜூலை 6 அன்று 88 வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தர  மாநகராட்சியை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது பகுதிக்  குழு தலைவராக தனபாக்கியம், செயலாளராக யமுனா, பொருளா ளராக முத்துலட்சுமி உட்பட 13 பேர்  கொண்ட புதிய பகுதிகுழுவும் தேர்வு  செய்யப்பட்டது. 7 பேர் கொண்ட வில்லாபுரம் புதிய அமைப்புக்குழு கன்வீனராக பா. சாந்தி தேர்வு செய்  யப்பட்டார்.