districts

img

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் மனு

மதுரை, மார்ச் 31 - திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள காவேரி நகர் மற்றும்  பர்மா காலனி பகுதியில்  ரயில் நிலை யத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக ரயில்வே துறையிடம்  இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது.எனவே மக்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க மதுரை  நாடாளுமன்ற  உறுப்பினரும், ரயில்வே நிலைக்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டது.  மனுவை பெற்றுக் கொண்ட சு. வெங்கடேசன் எம்.பி., மனு சம்மந்த மாக ரயில்வே அமைச்சகத்தில் உடனடி யாக பேசுவதாக உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர்  மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் ஏ.மல்லிகா, வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன்,  புறநகர் வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் எஸ்.சங்கர் மற்றும் வடிவழகன், வேலு, கட்சி கிளை செயலாளர்கள் பார்த்தீபன், வேளாங்கண்ணி, வாலிபர் சங்க கிளை செயலாளர் சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

;