தேனி, டிச.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 8 ஆவது மாநாடு டிசம்பர் 28 செவ்வாய்க்கிழமைன்று கம்பத்தில் எழுச்சியுடன் துவங்கியது. கம்பம் கோட்டை மைதானத்தில் பேண்டு வாத்தியங்கள் முன்னே வர, நூற்றுக்கும் மேற்பட்ட செந்தொண் டர்கள் ராணுவ மிடுக்குடன் குமுளி சாலையில் அணிவகுத்தனர். கோம்பை சிறுவர்கள் சிலம்பம் சுற்றி வந்தது காண் போரை ரசிக்க வைத்தது. பின்னர் கம் பம் நடராஜன் எம்பி நினைவு திருமண மண்டபம் முன்பு துவக்க நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செய லாளர் டி.வெங்கடேசன் தலைமை யேற்றார். தோழர் சி.சடையாண்டி நினைவாக தேனியிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்ட நினைவு கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் பா.ராம மூர்த்தி கொடுக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன் பெற்றுக் கொண் டார். கூடலூரிலிருந்து தோழர் எஸ். மொக்கராஜ் நினைவாக கொண்டு வரப்பட்ட கொடிமரத்தை கூடலூர் ஏரியா செயலாளர் பி.ஜெயராஜ் கொடுக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தயாளன் பெற்றுக் கொண்டார். முது பெரும் தலைவர் ஏ.அப்துல்வகாப் நினை வாக அவரது இல்லத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.அண்ணா மலை எடுத்துக் கொடுக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கண்ணன் பெற்றுக் கொண்டார். தோழர் எஸ். மல்லிகார்ஜுணன் நினைவாக தேவா ரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட நினைவு ஜோதியை சி.வேலவன் எடுத்து கொடுக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.நாகராஜ் பெற்றுக் கொண்டார். பின்பு மாநாட்டு அரங்கில் வைக்கப் பட்டிருந்த செங்கொடியை கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் ஏற்றி வைத்தார்.
பொது மாநாடு
மாநாட்டிற்கு எல்.ஆர்.சங்கரசுப்பு, சி.முனீஸ்வரன் ,சு.வெண்மணி ஆகி யோர் தலைமை வகித்தனர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.எஸ் .ஆறுமுகம் வாசித் தார். வரவேற்புக்குழு செயலாளர் கே.ஆர்.லெனின் வரவேற்புரையாற்றி னார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பேசினார். அரசியல் ஸ்தாபன அறிக் கையை மாவட்டச் செயலாளர் டி. வெங்கடேசன், வரவு செலவு அறிக்கை யை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.ஆர்.சங்கரசுப்பு ஆகியோர் சமர்ப்பித்தனர்.
புத்தக வெளியீடு
மாநாட்டில் பாரதி புத்தகாலயம் சார்பில் தமுஎகச தேனி மாவட்ட செய லாளர் அய் .தமிழ்மணி எழுதிய முகாமி என்ற சிறுகதை தொகுப்பினை மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் வெளியிட மூத்த தலை வர் கே.ராஜப்பன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இரண்டாம் நாள் பிரதி நிதிகள் மாநாடு புதனன்று நடைபெறு கிறது.