districts

img

சமயநல்லூர் காவல்துறை, போக்குவரத்துத் துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 28-  அரசு மகளிர் இலவசப் பேருந்  தில் பயணித்தவர்களை இழிவு படுத்திய ஓட்டுநர் காட்டுராஜா, நடத்துநர் அழகுபாண்டி மீது புகார் கொடுத்தும் கைது செய்து நட வடிக்கை எடுக்காத சமயநல்லூர் காவல்துறையைக் கண்டித்தும், தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத் தாய் மற்றும் கட்சியினர்  மீது பொய்  வழக்கு பதிவு செய்த சமயநல்லூர்  காவல்துறை சார்பு ஆய்வாளர்கள்   மீது நடவடிக்கை எடுக்கக்கோரி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டக் குழு  சார்பில்  சமயநல்லூரில் ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர்  மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்  திரன் தலைமை வகித்தார். மாநி லச் செயற்குழு உறுப்பினரும், முன்  னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி கண்டன உரை யாற்றினார். மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மேற்கு ஒன்றி யச் செயலாளர் பி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர்.  

கே.பாலபாரதி 

ஆர்ப்பாட்டத்தில் கே.பால பாரதி பேசுகையில், அரசு நல்ல நோக்கத்துடன் மகளிர் இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால்  ஒருசில நடத்துநர், ஓட்டு நர்கள் தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் செயல்படுகின்றனர். மக்களு டைய வரிப்பணம்தான் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு உதவியாக இருக்கி றது என்பது எங்களுக்குத் தெரி யும். இலவச பேருந்தில் பயணிக் கும் பெண்களை  இழிவாக பேசு வதை அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் பேருந்தில்  பெண்களை இழிவாகப் பேசுபவர்களை கண் டிக்கும் அரசுப்பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களும் இருக்கிறார்கள். இலவசமாக பயணிக்கும் பெண்களை யாரும் தவறாக பேசக்கூடாது என்று  முதலமைச்சர் கூறியுள்ளார். இதைத்தான்  மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய்   கேட்டிருக்கிறார்; பெண்களை தவறாகப் பேசியதை கண் டித்துள்ளார். அனைத்து ஓட்டு நர்கள் மற்றும் நடத்துநர்கள் இந்த திட்டத்தின் அருமையை, பயனை புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும்.  மதச்சார்பற்ற மாநில அரசு மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் துணைநிற்கிறோம். மதச்சார்பற்ற உணர்வு படைத்த அனைத்து மக்க ளும் துணைநிற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்  துறை கண்காணிப்பாளர் ஆகி யோர் உரிய முறையில் விசாரணை நடத்தி, இதுபோன்ற அரசின் சலுகைகளை பயன்படுத்தக்கூடிய பெண்களுக்கு நிகழக்கூடிய அவ மானங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொய்யான வழக்குகளை உடனடியாக திரும்  பப்பெற வேண்டும் என்று கூறி னார்.
 

;