அலங்காநல்லூர், ஜூன் 27- மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் கொச்சைப்படுத்தி பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை யான அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்க நட வடிக்கை எடுக்கப்படும் என தமி ழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது தேர்தல் அறிக்கையிலும், மதுரை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட் பாளர்களை ஆதரித்து திருமங்க லத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக்கூட்டத்திலும் உறுதியளித் தார். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தொடர்ந்து வலியுறுத்திவந்தது. அலங்காநல் லூர் சர்க்கரை ஆலையில் 2021-2022-ஆம் ஆண்டு அரவையை உட னடியாகத் தொடங்க வேண்டும். மின் உற்பத்தியை தொடங்க வேண் டும். எத்தனால் உற்பத்தியை தொ டங்க வேண்டும். உட்கட்டமைப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்க வேண்டுமென வலியுறு த்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் என். பழனிச்சாமி தலைமையில் சர்க்கரை ஆலையில் 46 நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் போராட் டத்தை ஆதரித்தும் சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார் பில் அலங்காநல்லூரில் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக அரசால் நிர்வாகச் சீர்கேடு
இந்த ஆலையின் நிர்வாகச் சீர்கேட்டிற்குக் காரணம் அதிமுக அரசு தான் என்பதையும் முதல்வர் அறிவார். அதிமுக செய்த தவ றுக்காக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கக் கூடாது. ஆலைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து அரவையை தொடங்க உத்தரவிட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை. மாலி சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசினார். கட்சியின் தமிழ்நாடு மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாநிலப் பொ துச் செயலாளர் பெ.சண்முகம் ஆகி யோரும் முதல்வரை சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து ஆலையை திறப்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்தார். இந்த நிலையில் அலங்காநல் லூர் சர்க்கரை ஆலையில் விவசாயி களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூன் 25 சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலை மையில் நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பெ.மூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலையை மூடியது விவசாயிகளாம்: திறந்தது மூர்த்தியாம்
கூட்டத்தில் பேசிய வேளாண் துறை அமைச்சர் “ தேசிய கூட்டு றவு சர்க்கரை ஆலையைத் திறக்கக் கோரி 46 நாட்கள் போராட்டம் நடத்தி னீர்கள். என்ன சாதிச்சீங்க, என்ன கிழிச்சீங்க, எதற்குப் போராடுவது என்றே தெரியாதா? போதிய கரும்பு இல்லாததால் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்காலிகமாக கரும்பு அரவை நிறுத்தப்பட்டது என்றா லும் ஆலையை மூடுவதற்கு விவ சாயிகளும், தொழிலாளர்களும் தான் காரணம். இப்போது கூட, தோழர்கள் போராடியதால் நாங்கள் குழு அமைக்கவில்லை. எங்கள் அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து வலி யுறுத்தியதால்தான் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுத்து வரு கிறோம். ஆலையைத் திறக்க 99 சத வீதம் மூர்த்தி தான் காரணம்” என் றார். மேலும் 46 நாட்கள் நடை பெற்ற போராட்டத்தை கொச்சைப் படுத்தி திரும்பத் திரும்ப பேசி யதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அமைச்சர் பெ.மூர்த்தி முயற்சி யால்தான் கூட்டுறவு ஆலையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று வேளாண் அமைச்சர் பேசட்டும். அதற்காக விவசாயிகள் போராட்டத்தை இழிவு படுத்திப் பேசியதை ஏற்க முடி யாது. கடந்த அதிமுக ஆட்சியின் தவறுகளால் தான் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. தொழிலாளர்களோ, விவசாயிகளோ இதற்குக் காரண மல்ல என்பதையும் அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் அறிக்கையில் கூறி யுள்ளார்.