கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி 12 வார்டு சிபிஎம் வேட்பாளர் ஆர். விசுவநாதனுக்கு வாக்குகள் கோரி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பிரச்சாரம் மேற்கொண்டார். மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.எஸ். அசோகன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்திரன், ஆர்.கலைசெல்வன், வட்டச் செயலாளர் வி.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாநகராட்சி 36-வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் மாலதி சுப்புராயனைஆதரித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.