districts

img

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை தொடர்ந்து இயக்கிடுக!

சாத்தூர், ஏப்.27- விருதுநகரில் உள்ள  புதிய பேருந்து நிலையத்தை  தொடர்ந்து இயக்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் நகர்க் குழு, விருதுநகர் வடக்கு ஒன்றியக்குழு, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார் பில் கோட்டாட்சியரிடம் மனு  அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைநகரான விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இப் பேருந்து நிலையமானது,  திறக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால், தற்போது வரை  பேருந்துகள் வந்து செல்வ தில்லை. இதனால், தென் பகுதியில் உள்ள ஊர்களில் இருந்து விருதுநகருக்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். மேலும், விருதுநகருக் குள் தொலை தூரப் பேருந்து கள் செல்லாது என பயணி களிடம் அரசுப் பேருந்து நடத்துநர்கள் கூறி தடுக்கும் நிலை உள்ளது.  இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் இப்பேருந்து நிலையத்தை செயல்படுத்த ஆலோசனைகளை வழங்கு மாறு சாத்தூர் கோட்டாட்சி யர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்  றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், மதுரை-நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும்  பைபாஸ் ரைடர் பேருந்துகள் அனைத்தையும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வரவழைக்க வேண்டும். தொலை தூரப் பேருந்து கள் மற்றும் ஆம்னி பேருந்து களை புதிய பேருந்து நிலை யத்திலிருந்து இயக்கிட வேண்டும். தொலைதூரப் பேருந்துகளுக்கான முன் பதிவு மையத்தை புதிய பேரு ந்து நிலையத்தில் மீண்டும் தொடங்க வேண்டும் என  அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.