ஒன்றிய சட்ட அமைச்சரும், ராஜஸ் தான் பாஜகவின் மூத்த தலைவரு மான அர்ஜுன் ராம் மேக்வால் பிரத மர் மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக கரு தப்படும் நிலையில், அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மீது ராஜஸ்தான் ஷாபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் மேக் வால் ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள கைலாஷ் மேக்வால், “ ஊழ லின் நம்பர் 1” அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் என்று கூறியுள்ளார். இந்நிலை யில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைத்த எம்எல்ஏ கைலாஷ் மேக்வாலை பாஜக தனது முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து புதனன்று சஸ்பெண்ட் செய் துள்ளது. ராஜஸ்தான் மாநில பாஜக தலை வர் சிபி ஜோஷி இந்த அறி விப்பை வெளி யிட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ள கைலாஷ் மேக்வால் தற் போது பாஜக வின் தேசிய துணைத் தலைவ ராகவும், ராஜஸ் தான் சட்டப் பேரவையின் முன்னாள் சபா நாயகராகவும் இருந்தவர். முக்கியமாக முன்னாள் பாஜக முதல்வரான வசுந்தரா ராஜேவிற்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.