districts

img

40% கூட முழுமையடையவில்லை: ஆசிரியர்கள் குமுறல்

மதுரை, மே 29-  தமிழ்நாடு முழுவதும் ஒளிவு  மறைவற்ற ஆசிரியர் பொதுமாறு தல் கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தொடக்கக்கல்வித் துறையில் விதிகளுக்குப் புறம்  பாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிர்வாக மாறுதல்களை எதி ர்த்தும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் ஒன்றிய மாறு தல், மாவட்ட மாறுதல் கலந் தாய்வை நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு  மையங்களில் தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மதுரையில் ஓசிபிஎம் பெண்  கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்க லம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பி னர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மேலூர் வட்டார செயலாளர் சாலம்  மாள் உட்பட ஏராளமான ஆசிரி யர்கள் கலந்துகொண்டனர். திருமங்கலம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலா ளர் முருகன், கல்வி மாவட்டத் தலை வர் இளங்குமரன், கல்வி மாவட் டச் செயலாளர் முருகேசன், ஆரம்  பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பாண்டியன், ஜெய ராஜ், வைரமணி, ரமேஷ், ஜோஸ் பின் நிர்மலா உட்பட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

“தமிழ்நாடு முழுவதும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஒளிவு  மறைவற்ற ஆசிரியர் பொதுமாறு தல் கலந்தாய்வை நடத்த பள்  ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அட்டவணை வெளி யிட்டது. அவ்வாறு வெளியிடப்  பட்ட அட்டவணை தொடக்கக்  கல்வித்துறையில் இதுவரை ஏழு  முறை திருத்தியமைக்கப்பட் டுள்ளது. தொடக்கக்கல்வித் துறை யில் ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசி ரியர் பதவி உயர்வுகள் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான நீதி மன்ற வழக்குகளைக் காரணம்  காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறவில்லை. மொத்தத்தில் இதுவரை 40 சதவீதம் கூட கலந் தாய்வு நடைபெறவில்லை.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் காலிப் பணி யிடங்கள் மற்றும் தேவைப் பணி யிடங்களில் விதிகளுக்குப் புறம்பாக நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மாறுதல் ஆணைகளை தொடக்கக்கல்வித்துறை தொடர்ந்து வழங்கி வருகிறது. முன்னுரிமைப்படி தங்களுக்கு பணிமாறுதல் கிடைக்கும் என்று  எதிர்பார்த்து மாறுதல் கோரி  விண்ணப்பித்திருந்த ஆசிரியர்  களுக்குக் கிடைக்க வேண்டிய பணி யிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன என்றார் அமைப்பின் மதுரை மாவட்டச் செயலாளர் சீனிவாசன்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட திட்ட அலு வலகம் முன்பு மாவட்டத் தலை வர் தாமஸ் அமலநாதன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்  கள் குமரேசன், ஞான அற்புத ராஜ், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாநிலத்  துணைத் தலைவர் ஆரோக்கிய ராஜ் மாவட்டப் பொருளாளர் கலைச்செல்வி, தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்க மாவட்டத்  தலைவர் நரசிம்மன், ஜான் அந்  தோணி, ரவி, சிங்கராயர், சகாய தைனேஸ், பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உட்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி  பல்வேறு சகோதர அமைப்பு களின் நிர்வாகிகள், தலைவர்கள் பேசினர்.
 

;