districts

img

தோழர் வி.செல்வராஜ் காலமானார்

தேனி, நவ.21- தேனி ஒன்றியம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோட்டைப்பட்டி கிளைச்  செயலாளர் வி.செல்வராஜ் ஞாயிறன்று காலமானார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணி புரிந்து ஓய்வு  பெற்று கட்சியின் கிளை செயலாளராக திறம்பட பணியாற்றி வந்தார் .அன்னாரது மறைவுக்கு இரங்கல் கூட்டம் தேனி தாலுகா குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை ,மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.வெங்கடேசன்,சி.முருகன்,எம் .ராமச்சந்திரன், டி.கண்ணன், சு.வெண்மணி, தாலுகா செயலாளர் இ.தர்மர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.