அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் எஸ்.ஞானம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று மதுரையில் நடைபெற்றது. மேலப்பொன்னகரம் பகுதிகுழு உறுப்பினர் ப்ரிதி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி தோழர் எஸ்.ஞானம் உருவப் படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.